காலம் அனைத்தையும்  நினைவில் வைத்துக்கொள்கிறது. காலத்திடம் மறதி இல்லை. மனிதன்தன் சக மனிதனுடன் கொண்டுள்ள தொடர்பையும் , பிரபஞ்சத்தின் பிற உயிர்களோடு கொண்டுள்ள தொடர்பையும் காலம் நினைவில் வைத்திருந்து  கணக்கை தீர்த்துக்கொள்ள அவனை வற்புறுத்துகிறது.  ஒவ்வொரு வாழ்வின்  தொடர்ச்சியிலும் , மரணத்தின்தொடர்ச்சியிலும் இது நிகழ்ந்து கொண்டே வருகிறது.   
ஒரு வீடு மின்னலைத் தன்  பக்கம் இழுக்காமல் இடி அதன் மேல் விழுவதில்லை. இடி விழுவதற்கும் தனது அழிவிற்கும் அந்த வீடும் ஒரு காரணமாகிவிடுகிறது. 
ஒரு மாடு குத்தப் படுகிறவன் அதை தன்    பக்கம் குத்துவதற்கு ஈர்க்காமல் அது அவனை கொம்பால் குத்தாது. ரத்தம் சிந்தியத்தில் மாட்டை விட மனிதனின் குற்றமே அதிகம். 
கொலையுண்டவன் கொலைகாரனின் கத்தியை ரத்தத்தால் நனைக்கிறான். மரணக்குத்துக்கு இருவருமே காரணமானவர்கள். 
கொள்ளை  கொடுத்தவன் , கொள்ளையனின் செயலை வழி நடத்துகிறான். கொள்ளையில் இருவருக்குமே பங்குண்டு. 
மனிதன் தனது குழப்பத்தை தானே வரவழைத்துக் கொள்கிறான். அவற்றிற்கு எங்கே எப்போது அழைப்பு  விடுத்தான் என்பது மறந்து போய் அவற்றை எதிர்க்கிறான். 
ஆனால் காலம் மறப்பதில்லை. சரியான தருணத்தில், சரியான முகவரியில் அது அழைப்பை விநியோகிக்கவே செய்கிறது. 
அதனால் வருவதை எதிர்க்காதீர்கள். அது நீண்ட நாள் தங்கியதற்காக அல்லது அடிக்கடி வருவதற்காக அதைப்பழி வாங்க நினைக்காதீர்கள். 
கால வெளியில் விபத்துக்களே இல்லை. எல்லாம் சரியாக  திட்டமிட்டபடி  வல்லமை கொண்ட காலத்தால்  இயக்கப்படுகிறது. 
அது தவறு செய்வதும் இல்லை. எதையும் புறக்கணிப்பதும் இல்லை.  
தகவல்: மிர்தாதின் புத்தகம். 
 

 
No comments:
Post a Comment