......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Thursday, December 29, 2011

Moon Again

நிலவில் லயித்தவுடன்
வீட்டை நோக்கி நடக்கிறது என் நிழல்
என்னுடனேயே-  சோடோவின் ஹைக்கூ

நிலவில் லயித்தவுடனேயே ... பௌர்ணமி நிலா - இது ஜென்னில் மரபாகிவிட்டது. பௌர்ணமி இரவில் ஜென் சாதகர்கள் உறங்குவதே இல்லை. அவர்கள் மலையினூடே நடக்கிறார்கள். அங்கே அந்த நிலவு. நீர்வீழ்ச்சிகளை வெள்ளி வீழ்ச்சிகளாக மற்றும் பேரழகை பருகுகிறார்கள். முழுச்சூழ்நிளையையும் கனவு லோகமாக மாற்றிவிடும் அந்த நிலவின் ஒளியில் குளிக்கிறார்கள். சோடோ கூறுகிறார்:


நிலவில் லயித்தவுடன் 
வீட்டை நோக்கி நடக்கிறது என் நிழல்
என்னுடனேயே-  

அப்படியொரு அமைதி. யாரும் என்னுடன் இல்லை . எனது நிழல் மட்டுமே என்னருகில் நடந்து வருகிறது. இந்த அழகான அற்புதமான உலகைப்பார்த்துவிட்டு உனது ஆன்ம வீட்டுக்குள் நீ நுழையும் பொது யாருமே உன்னுடன் இருக்கமாட்டார்கள். உனது நிழல் கூட இருக்காது. உனது ஏகாந்தம் பூரணமானது. நம்முடைய இயற்கையாகவே இருக்கின்ற இந்த ஏகாந்தத்தை துய்ப்பதற்கு , தியானமும் ஒரு நடைமுறை முன்னேர்ப்ப்பாடே. 

மூலம் : ஓஷோ 

Wednesday, December 28, 2011

Moon again!

ஒரே பூதாத்மாதான்
ஒவ்வோர் உயிரிலும்
நிலை பெற்றிருக்கிறது
அது ஒன்றே யாயினும்
நீரில் நிலாவைப்போல்
பலவாகக் காணப்படுகிறது -  அமிருத பிந்து உபநிடதம்

குளத்து நிலா வேறு, குட்டை நிலா வேறு , நதி நிலா வேறு , கடல் நிலா வேறு என்று யாராவது சொன்னால் நகைக்கத்தனே தோன்றும். எல்லாம் ஒன்றே என்று அறிவது தான் ஏகத்துவம். ஒன்றாக காண்கிறவன் பிறவியை அறுக்கிறான். எவன் பலவாகக் காண்கிறானோ அவன் சாவிலிருந்து சாவை அடைகிறான் என்கிறது சூதம பிரபோத உபநிடதம் ஜப்பானிய கவிஞர் பாஷோ கூறுகிறார்:

பிரபஞ்சம் சிலந்தி வலை.
வலையில் எங்கே தொட்டாலும்
வலை முழுதும் அதிர்கிறது.

அதைப்போலவே
ஓர் இலையை நாம் தொட்டால்
வானத்து நட்சத்திரங்கள் எல்லாம்
நடுங்கும்.

இலையைத்தொட்டால் நட்சத்திரங்கள் நடுங்குவது நம் கண்ணுக்குத்தெரியாமல் இருக்கலாம். ஆனால் படைப்புகள் எல்லாம் அந்தரங்கத்தில் தொடர்பு கொண்டிருக்கின்றன.

மூலம்: இது சிறகுகளின் நேரம்,  அப்துல் ரகுமான்

Tuesday, December 27, 2011

Song of a flower

இயற்கை அன்புடன்
திரும்ப திரும்ப சொல்லும்
பாசமுள்ள வார்த்தை நான்.

நீலவானக்கூடாரத்திளிருந்து
பச்சைக்கம்பள விரிப்பில்
விழுந்த மீன் நான்.

குளிர்காலம் கர்ப்பம் தரித்த
பஞ்சபூதங்களின் புதல்வி நான்
இளவேனிளுக்காக பெற்றுத்தந்த
குழந்தை நான்.

கோடை காலத்தின்  மடியில் தவழ்ந்தேன்
இலையுதிர் காலத்தின் படுக்கையில்  உறங்கினேன்
வைகரைப்பொழுதில்
ஒளியின் வருகையை அறிவிக்க
நான் தென்றலுடன் இணைந்தேன்.

மாலைப்பொழுதில்
பறவைகளுடன் சேர்ந்து கொண்டேன்
வெளிச்சத்திற்கு விடைகொடுத்தனுப்ப.

சமவேளிகளெல்லாம் எனது
அழகிய வண்ணங்களால் அணி செய்யப்பட்டன.
காற்றுக்கு நான் மணமூட்டினேன்.

நான் உறக்கத்தை தழுவும் பொது
இரவின் கண்கள் எனக்கு காவலிருக்கும்.
நான் விழித்த பொது
கதிரவனைக்கண்டு வெறித்தேன்.
அப்போதைய நாளின் ஒரே கண் அவன்தான்.

நான் பனித்துளி மதுவைக்குடித்தேன்.
பறவைகளின் குரல்களைக்கேட்டேன்
புல்லின் அசைவிற்க்கேட்ப நடனமாடினேன்.

நான் காதலனின் பரிசு.
நான் திருமண மாலை.
நான் மகிழ்ச்சியின் நொடி.
நான் வாழ்வோர்
இறந்தவர்க்கு கொடுக்கும் பரிசு
நான் மகிழ்ச்சியின் பகுதி.

துக்கத்தின் பாகம்.
நான் தலை தூக்கிப் பார்ப்பது
ஒளியை மட்டுமே
நான் எப்பொழும் தலைகுனிந்து
என் நிழலைப் பார்ப்பது இல்லை.

இந்த ஞானத்தைத்தான்
மனிதன் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டும்.



கலீல் ஜிப்ரான் : ஞானக் களஞ்சியம்






Zen HiHoo ...

நீரில் அந்த நிலவு
உடைகிறது மீண்டும் உடைகிறது
ஆயினும் முழுமையாய்- கவிஞர் ஷோஷு

எப்படி ஜென் கவிஞர்கள் இப்படியெல்லாம் சொல்கிறார்கள் என்பது நம்பமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஷோஷு என்ன சொல்கிறார்?

நீரில் அந்த நிலவு
உடைகிறது மீண்டும் உடைகிறது.


... காரணம் ஒவ்வொருமுறையும் காற்று வீசினாலும் அலைகள் உண்டானாலும் அந்த நிலவு ஆயிரக்கனக்கனான துண்டுகளாய் உடைகிறது. ஆனால் மீண்டும் அந்த ஏரி அமைதியானால், ஏரி முழுதும் சிதறி அலைந்த அத்தனை துண்டுகளும் ஒன்றாகச் சேர்கின்றன. ஏனெனில் அது ஒரு பிம்பம் தான் . நிலவு ஒருபோதும் உடைவதில்லை. உடைவதேல்லாம் அதன் பிம்பம் மட்டுமே. நிலவு எப்போதும் உடைவதில்லை என்பதனாலேயே அந்தப்பிம்பம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் உடைந்து சிதறினால்தான் என்ன? நமது எல்லா உடல்களும், எல்லா மனங்களும் நம் பிம்பங்கலன்றி வேறென்ன? ஆயிரமாயிரம் துண்டுகளாய் உடைந்ததன்றி வேறென்ன? ஆயினும் உனது ஆன்ம இருப்பின் அடியாழத்தில் அந்த நிலவு இன்னமும் பூரனமாய் எப்போதும் போல் முழு நிலவாக இருக்கிறதே!

Monday, December 12, 2011

A state to be in


Way to oneness


Zen haikoo 1

நீயாய்த்தான் விழி மலரவேண்டும்
நிலவொளியில் குளிக்கும் 
நீள்வரி மலர்களைத் தரிசிக்க....ஜென் ஹைக்கூ ...
( நீள்வரி மலர்கள்= மூங்கில் மலர்கள்)

மற்றவர்களின் கண்களை நீ நம்ப முடியாது. அந்த அழகு அற்புதமானது. எவ்வகை விவரிப்பும்  ஈடு செய்யமுடியாத அளவு ரம்மியமானது. இதற்கு எந்த விளக்கங்களும் சொல்லமுடியாது. உனது சொந்த ஆன்ம விழிப்பு நிலை பற்றியும் இதுவே தான் உண்மை. அளவிடமுடியாத நிலையில் பரந்தும், அபூர்வச்சிறப்பும் வாய்ந்தது அது. அதன் உன்னமான அழகை நீ உன் கண்களைத் கொண்டே தரிசிக்க  வேண்டும். உன்னைத்தவிர வேறு யாரையும் விசுவாசிக்காதே . உனக்குள்ளேயே நீ அசைக்க முடியாத அளவு நம்பிக்கை கொள். அந்த ஆழ்ந்த நம்பிக்கை உனக்கு ஒரு வழியை உண்டாக்குமானால் , ஒரு குறிப்பிட்ட சத்தினி பாதத்தோடு அன்பு கொள்ளுமானால், ஒரு குறிப்பிட்ட குருவிடம்   இட்டுச் செல்லுமானால், எவ்வித  முயற்சியும் செய்யாதே. அமைதியாக அதை நிகழ அனுமதித்து விடு.காலடி ஓசையைகூட எழுப்பி விடாதே. பாக்கியம்  செய்தவனாக நீ இருந்தால் உன்னால் ஒருவரைகாணமுடியும். . அப்படி ஒரு குருவைக் கண்டு கொள்ள வாய்க்க வில்லை என்றால் எல்லோராலும் கைவிடப்பட்டவன் என்று நினைத்து மருகிக்கொண்டிராதே. பிரபஞ்ச ஆன்மாவே நேரடியாக அடைய உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது. கொஞ்சம் அதிக தைரியம் வேண்டும். அவ்வளவு தான். கொஞ்சம் அதிக தைரியம் அல்லது ஒரு குரு , இந்த இரண்டுக்கான சாத்தியம் எந்த நேரத்திலும் உண்டு. எந்த வயதினிலும்  உண்டு.
மூலம்: பிரபஞ்ச ரகசியம், ஓஷோ 

Sunday, December 4, 2011

Karai Siththar 1

ஓம்  எனும் ஒரேழுத்தே எவைக்கும்  மூலம்
        ஓமுக்குள் மூவெழுத்தாம் ஊமையொன்றாம்
ஆமென்னும் அகரமடா பரமாஹந்தை
        அகண்டபரி பூரணமாம் ஆட்சியாகும்
ஊமென்னு முகரமடா உருவமாகும்
        உயிர்பபாகி  எட்டிரண்டா யோடும் சாடும்
மாமென்னும் மகரத்தின் மெய்தான் நீண்ட
        மாயாத மாயையென வளருங் கண்டாய்  .  273


ஊமை  எழுத் தொன்றுலதாம் உள்ளுக்குள்ளே 
        உண்மைஎழுத் தேயதுவாங் குருவைகேளு
ஆமை எழுத்தாயடங்கி மடங்கியப்பால்
        ஆணவமா மலஞ்சுட்டே யாரதாரத்
தூமை எழுத்தைம்பா நொண்ட்ரான மாத்ரைத்
         துரிசருத்துக் கோடிமணிக்  கோயிலுள்ளே
வாமைஎழுத் தானமனோண்மணி என்னாத்தாள்
         வைரவியப்பணிந்திட்டால் சித்தம் சித்தி    . 274


நன்றி: காரை சித்தரின் கனக வைப்பு

      






Saturday, December 3, 2011

Explore within 1






Source: Thinking and Destiny HW Percival

Friday, December 2, 2011

Course of Life 6


             Angulimal is a man who wears a garland of human fingers. He had taken a vow that he would kill one thousand people; from each single person he would take one finger so that he could remember how many he had killed and he will make a garland of all those fingers. In his garland of fingers he had nine hundred and ninety-nine fingers — only one was missing. And that one was missing because his road was closed; nobody was coming that way. 
           But Gautam Buddha entered that closed road. The king had put guards on the road to prevent people, particularly strangers who didn’t know that a dangerous man lived behind the hills. The guards told Gautam Buddha, “That is not the road to be used. You will have to take a little longer route, but it is better to go a little longer than to go into the mouth of death itself.
          This is the place where Angulimal lives. Even the king has not the guts to go on this road. That man is simply mad.

“His mother used to go to him. She was the only person who used to go, once in a while, to see him, but even she stopped. The last time she went there he told her, `Now only one finger is missing, and just because you happen to be my mother...I want to warn you that if you come another time you will not go back. I need one finger desperately.
        Up to now I have not killed you because other people were available, but now nobody passes on this road except you. So I want to make you aware that next time if you come it will be your responsibility, not mine.’ Since that time his mother has not come.”


Guards: “Don’t unnecessarily take the risk.”
           Buddha: “If I don’t go then who will go? Only two things are possible: either I will change him, and I cannot miss this challenge; or I will provide him with one finger so that his desire is fulfilled. Anyway I am going to die one day. Giving my head to Angulimal will be at least of some use; otherwise one day I will die and you will put me on the funeral pyre. I think that it is better to fulfill somebody’s desire and give him peace of mind. Either he will kill me or I will kill him, but this encounter is going to happen; you just lead the way.”


          Angulimal was sitting on his rock watching. He could not believe his eyes. A very beautiful man of such immense charisma was coming towards him. Who could this man be? He had never heard of Gautam Buddha, but even this hard heart of Angulimal started feeling a certain softness towards the man. He was looking so beautiful, coming towards him. It was early morning...a cool breeze, and the sun was rising...and the birds were singing and the flowers had opened; and Buddha was coming closer and closer.

Finally Angulimal, with his naked sword in his hand, shouted:
       A: “Stop!Don’t take another step because then the responsibility will not be mine. Perhaps you don’t know who I am!”


       B: “Do you know who you are?”
       A: “This is not the point. Neither is it the place nor the time to discuss such things. Your life is in danger!”


       B: “I think otherwise — your life is in danger.”


       A: “I used to think I was mad — you are simply mad. And you go on moving closer. Then don’t say that I killed an innocent man. You look so innocent and so beautiful that I want you to go back. I will find somebody else. I can wait; there is no hurry. If I can manage nine hundred and ninety-nine...it is only a question of one more, but don’t force me to kill YOU.”


      B:“You are absolutely blind. You can’t see a simple thing: I am not moving towards you, you are moving towards me.”


      A: “This is sheer craziness! Anybody can see that you are moving and I am standing on my rock. I have not moved a single inch.”


      B: “Nonsense! The truth is, since the day I became enlightened I have not moved a single inch. I am centered, utterly centered, no movement. And your mind is continuously moving round and round in circles...and you have the guts to tell to me to stop. You stop! I have stopped long ago.”


      A: “It seems you are impossible, you are incurable. You are bound to be killed. I will feel sorry, but what can I do? I have never seen such a mad man.”


       Buddha came very close, and Angulimal’s hands were trembling. The man was so beautiful, so innocent, so childlike. He had already fallen in love. He had killed so many people.... He had never felt this weakness; he had never known what love is. For the first time he was full of love. So there was a contradiction: the hand was holding the sword to kill the person, and his heart was saying, “Put the sword back in the sheath.”


Buddha:“I am ready, but why is your hand shaking? — you are such a great warrior, even kings are afraid of you, and I am just a poor beggar. Except the begging bowl, I don’t have anything. You can kill me, and I will feel immensely satisfied that at least my death fulfills somebody’s desire; my life has been useful, my death has also been useful. But before you cut my head I have a small desire, and I think you will grant me a small desire before killing me.”


       A: “What do you want?”


       B: “I want you just to cut from the tree a branch which is full of flowers. I will never see these flowers again; I want to see those flowers closely, feel their fragrance and their beauty in this morning sun, their glory.”


       So Angulimal cut with his sword a whole branch full of flowers. And before he could give it to Buddha, Buddha said, “This was only half the desire; the other half is, please put the branch back on the tree.”


        A: “I was thinking from the very beginning that you are crazy. Now this is the craziest desire. How can I put this branch back?”


Buddha:“If you cannot create, you have no right to destroy. If you cannot give life, you don’t have the right to give death to any living thing.”


A moment of silence and a moment of transformation...the sword fell down from his hands. Angulimal fell down at the feet of Gautam Buddha, and he said, “I don’t know who you are, but whoever you are, take me to the same space in which you are; initiate me.”


By that time the followers of Gautam Buddha had come closer and closer.
“Don’t initiate this man, he is a murderer. And he is not an ordinary murderer; he has murdered nine hundred and ninety-nine people, all innocent, all strangers. They have not done any wrong to him. He had not even seen them before!”


           Buddha:“If I don’t initiate him, who will initiate him? And I love the man, I love his courage. And I can see tremendous possibility in him: a single man fighting against the whole world. I want this kind of people, who can stand against the whole world. Up to now he was standing against the world with a sword; now he will stand against the world with a consciousness which is far sharper than any sword. I told you that murder was going to happen, but it was not certain who was going to be murdered — either I was going to be murdered, or Angulimal.
            Now you can see Angulimal is murdered. And who I am to judge?”

He initiated Angulimal.

The question is not whether anybody is worthy or not. The question is whether you have the consciousness, the abundance of love — then forgiveness will come out of it spontaneously. It is not a calculation, it is not arithmetic.

Life is love, and living a life of love is the only religious life, the only life of prayer, peace, the only life of gratitude, grandeur, splendor. 


Source: Osho, From Here to Here