பாரசீக நாடு 13 வது நூற்றாண்டில் ஒரு மாபெரும் கவிஞனை கண்டது. 
மவுலான ரூமி. அவருடைய கவிதைகளுள் சில:
மவுலான ரூமி. அவருடைய கவிதைகளுள் சில:
தாகமுள்ளவரே உலகத்தில் 
தண் நீரைத்தேடுவர் ;
தண்ணீரும் தாகமுள்ளோரை
தேடி அலைகிறது .
         மூலாதாரத்தைத் தொலைத்து 
        வெகு தூரம் சென்றுவிட்டவன் 
        மீண்டும் அத்தொடர்பைத்தேடி 
        வந்தே தீருவான்.
முரண்பாடுகளின் சமாதானமே 
வாழ்க்கை-
தன மூலாதாரத்தை நாடுவதே
மரணம்.
        உன் உருவத்தைக்கண்டு நீயே 
        உனக்கு பகைவனாகிறாய் 
        உன் மீது நீயே 
        வாளை வீசிக்கொள்கிறாய்
உன்னுடைய தோற்றமே 
அடுத்தவர்களில் மிளிர்கிறது
உன்னுடைய நயவஞ்சகமும் 
உன்னுடைய அறியாமையும் தான் 
அவர்களில் தென்படுகிறது.
        நீயேதான் அது.
       நீ சுட்ட வடுக்கள் தான் அவை.
       நீ இடும் சாபங்கள் எல்லாம் 
       உனக்கு நீயே இட்டுக்கொள்வது. 
அடுத்தவர் முகத்தில் பாவ
புள்ளியைக்கான்பவனே
அது உன் மச்சத்தின் பிம்பமே 
 

 
No comments:
Post a Comment