......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Thursday, December 29, 2011

Moon Again

நிலவில் லயித்தவுடன்
வீட்டை நோக்கி நடக்கிறது என் நிழல்
என்னுடனேயே-  சோடோவின் ஹைக்கூ

நிலவில் லயித்தவுடனேயே ... பௌர்ணமி நிலா - இது ஜென்னில் மரபாகிவிட்டது. பௌர்ணமி இரவில் ஜென் சாதகர்கள் உறங்குவதே இல்லை. அவர்கள் மலையினூடே நடக்கிறார்கள். அங்கே அந்த நிலவு. நீர்வீழ்ச்சிகளை வெள்ளி வீழ்ச்சிகளாக மற்றும் பேரழகை பருகுகிறார்கள். முழுச்சூழ்நிளையையும் கனவு லோகமாக மாற்றிவிடும் அந்த நிலவின் ஒளியில் குளிக்கிறார்கள். சோடோ கூறுகிறார்:


நிலவில் லயித்தவுடன் 
வீட்டை நோக்கி நடக்கிறது என் நிழல்
என்னுடனேயே-  

அப்படியொரு அமைதி. யாரும் என்னுடன் இல்லை . எனது நிழல் மட்டுமே என்னருகில் நடந்து வருகிறது. இந்த அழகான அற்புதமான உலகைப்பார்த்துவிட்டு உனது ஆன்ம வீட்டுக்குள் நீ நுழையும் பொது யாருமே உன்னுடன் இருக்கமாட்டார்கள். உனது நிழல் கூட இருக்காது. உனது ஏகாந்தம் பூரணமானது. நம்முடைய இயற்கையாகவே இருக்கின்ற இந்த ஏகாந்தத்தை துய்ப்பதற்கு , தியானமும் ஒரு நடைமுறை முன்னேர்ப்ப்பாடே. 

மூலம் : ஓஷோ 

No comments:

Post a Comment