......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Tuesday, January 3, 2012

Sippi

பாரசீகக் கவி ஞானி ஜலாலுதீன்   ரூமி பாடுகிறார்:

கடலின் அடியாழத்தில் இருக்கும் முத்து,
தன் சிப்பிக்குள் இருந்தபடியே
சமுத்திரமா? அது எங்கே இருக்கிறது ? என்று கேட்கிறது.
அந்த முத்தைப்போன்றவன் தான் மனிதன்.

பாலூற்று உனக்குள் இருக்கிறது.
நீ ஏன் செம்பை எடுத்துக்கொண்டு
பாலுக்கு அலைகிறாய்?

உன் தலையில் உணவுக்கூடை இருக்கிறது.
நீ  ஏன் எச்சில் சோற்றுக்காக
வீடு வீடாய் பிச்சை எடுக்கிறாய்?

உள் கதவைத் தட்டு.
வேறு கதவுகளைத் தட்டாதே.

நீ நீருக்குள் இருக்கிறாய்.
ஆனால்  அடுத்தவனிடம்
நீர்கேட்டு அலைகிறாய்.

உன்னைச்சுற்றி இருக்கும் நீரை
நீ பார்க்க முடிவதில்லை.
நீரை உன் பார்வைக்கு மறைக்கும்
தடைகளைத்தான் உன்னால்
பார்க்க முடிகிறது.

படைப்புகளைப் பற்றி அறிய கேள்விகள் உதவும்.படைத்தவனைப்பற்றி அறிய உதவாது.
அறியாதவனே கேள்வி கேட்பான். அறிந்தவன் கேட்க மாட்டன்.
எல்லக்கேள்விகளுக்கும் விடையாக இருப்பவன் இறைவன்.
விடை இருக்கும் பொது கேள்விகள் எதற்கு?

மூலம்: அப்துல் ரகுமான் :இது சிறகுகளின் நேரம்


No comments:

Post a Comment