நீயாய்த்தான் விழி மலரவேண்டும்
நிலவொளியில் குளிக்கும்
நீள்வரி மலர்களைத் தரிசிக்க....ஜென் ஹைக்கூ ...
( நீள்வரி மலர்கள்= மூங்கில் மலர்கள்)
மற்றவர்களின் கண்களை நீ நம்ப முடியாது. அந்த அழகு அற்புதமானது. எவ்வகை விவரிப்பும் ஈடு செய்யமுடியாத அளவு ரம்மியமானது. இதற்கு எந்த விளக்கங்களும் சொல்லமுடியாது. உனது சொந்த ஆன்ம விழிப்பு நிலை பற்றியும் இதுவே தான் உண்மை. அளவிடமுடியாத நிலையில் பரந்தும், அபூர்வச்சிறப்பும் வாய்ந்தது அது. அதன் உன்னமான அழகை நீ உன் கண்களைத் கொண்டே தரிசிக்க வேண்டும். உன்னைத்தவிர வேறு யாரையும் விசுவாசிக்காதே . உனக்குள்ளேயே நீ அசைக்க முடியாத அளவு நம்பிக்கை கொள். அந்த ஆழ்ந்த நம்பிக்கை உனக்கு ஒரு வழியை உண்டாக்குமானால் , ஒரு குறிப்பிட்ட சத்தினி பாதத்தோடு அன்பு கொள்ளுமானால், ஒரு குறிப்பிட்ட குருவிடம் இட்டுச் செல்லுமானால், எவ்வித முயற்சியும் செய்யாதே. அமைதியாக அதை நிகழ அனுமதித்து விடு.காலடி ஓசையைகூட எழுப்பி விடாதே. பாக்கியம் செய்தவனாக நீ இருந்தால் உன்னால் ஒருவரைகாணமுடியும். . அப்படி ஒரு குருவைக் கண்டு கொள்ள வாய்க்க வில்லை என்றால் எல்லோராலும் கைவிடப்பட்டவன் என்று நினைத்து மருகிக்கொண்டிராதே. பிரபஞ்ச ஆன்மாவே நேரடியாக அடைய உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது. கொஞ்சம் அதிக தைரியம் வேண்டும். அவ்வளவு தான். கொஞ்சம் அதிக தைரியம் அல்லது ஒரு குரு , இந்த இரண்டுக்கான சாத்தியம் எந்த நேரத்திலும் உண்டு. எந்த வயதினிலும் உண்டு.
மூலம்: பிரபஞ்ச ரகசியம், ஓஷோ
No comments:
Post a Comment