......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Tuesday, December 27, 2011

Zen HiHoo ...

நீரில் அந்த நிலவு
உடைகிறது மீண்டும் உடைகிறது
ஆயினும் முழுமையாய்- கவிஞர் ஷோஷு

எப்படி ஜென் கவிஞர்கள் இப்படியெல்லாம் சொல்கிறார்கள் என்பது நம்பமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஷோஷு என்ன சொல்கிறார்?

நீரில் அந்த நிலவு
உடைகிறது மீண்டும் உடைகிறது.


... காரணம் ஒவ்வொருமுறையும் காற்று வீசினாலும் அலைகள் உண்டானாலும் அந்த நிலவு ஆயிரக்கனக்கனான துண்டுகளாய் உடைகிறது. ஆனால் மீண்டும் அந்த ஏரி அமைதியானால், ஏரி முழுதும் சிதறி அலைந்த அத்தனை துண்டுகளும் ஒன்றாகச் சேர்கின்றன. ஏனெனில் அது ஒரு பிம்பம் தான் . நிலவு ஒருபோதும் உடைவதில்லை. உடைவதேல்லாம் அதன் பிம்பம் மட்டுமே. நிலவு எப்போதும் உடைவதில்லை என்பதனாலேயே அந்தப்பிம்பம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் உடைந்து சிதறினால்தான் என்ன? நமது எல்லா உடல்களும், எல்லா மனங்களும் நம் பிம்பங்கலன்றி வேறென்ன? ஆயிரமாயிரம் துண்டுகளாய் உடைந்ததன்றி வேறென்ன? ஆயினும் உனது ஆன்ம இருப்பின் அடியாழத்தில் அந்த நிலவு இன்னமும் பூரனமாய் எப்போதும் போல் முழு நிலவாக இருக்கிறதே!

No comments:

Post a Comment