......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Wednesday, December 28, 2011

Moon again!

ஒரே பூதாத்மாதான்
ஒவ்வோர் உயிரிலும்
நிலை பெற்றிருக்கிறது
அது ஒன்றே யாயினும்
நீரில் நிலாவைப்போல்
பலவாகக் காணப்படுகிறது -  அமிருத பிந்து உபநிடதம்

குளத்து நிலா வேறு, குட்டை நிலா வேறு , நதி நிலா வேறு , கடல் நிலா வேறு என்று யாராவது சொன்னால் நகைக்கத்தனே தோன்றும். எல்லாம் ஒன்றே என்று அறிவது தான் ஏகத்துவம். ஒன்றாக காண்கிறவன் பிறவியை அறுக்கிறான். எவன் பலவாகக் காண்கிறானோ அவன் சாவிலிருந்து சாவை அடைகிறான் என்கிறது சூதம பிரபோத உபநிடதம் ஜப்பானிய கவிஞர் பாஷோ கூறுகிறார்:

பிரபஞ்சம் சிலந்தி வலை.
வலையில் எங்கே தொட்டாலும்
வலை முழுதும் அதிர்கிறது.

அதைப்போலவே
ஓர் இலையை நாம் தொட்டால்
வானத்து நட்சத்திரங்கள் எல்லாம்
நடுங்கும்.

இலையைத்தொட்டால் நட்சத்திரங்கள் நடுங்குவது நம் கண்ணுக்குத்தெரியாமல் இருக்கலாம். ஆனால் படைப்புகள் எல்லாம் அந்தரங்கத்தில் தொடர்பு கொண்டிருக்கின்றன.

மூலம்: இது சிறகுகளின் நேரம்,  அப்துல் ரகுமான்

No comments:

Post a Comment