இயற்கை அன்புடன்
திரும்ப திரும்ப சொல்லும்
பாசமுள்ள வார்த்தை நான்.
நீலவானக்கூடாரத்திளிருந்து
பச்சைக்கம்பள விரிப்பில்
விழுந்த மீன் நான்.
குளிர்காலம் கர்ப்பம் தரித்த
பஞ்சபூதங்களின் புதல்வி நான்
இளவேனிளுக்காக பெற்றுத்தந்த
குழந்தை நான்.
கோடை காலத்தின் மடியில் தவழ்ந்தேன்
இலையுதிர் காலத்தின் படுக்கையில் உறங்கினேன்
வைகரைப்பொழுதில்
ஒளியின் வருகையை அறிவிக்க
நான் தென்றலுடன் இணைந்தேன்.
மாலைப்பொழுதில்
பறவைகளுடன் சேர்ந்து கொண்டேன்
வெளிச்சத்திற்கு விடைகொடுத்தனுப்ப.
சமவேளிகளெல்லாம் எனது
அழகிய வண்ணங்களால் அணி செய்யப்பட்டன.
காற்றுக்கு நான் மணமூட்டினேன்.
நான் உறக்கத்தை தழுவும் பொது
இரவின் கண்கள் எனக்கு காவலிருக்கும்.
நான் விழித்த பொது
கதிரவனைக்கண்டு வெறித்தேன்.
அப்போதைய நாளின் ஒரே கண் அவன்தான்.
நான் பனித்துளி மதுவைக்குடித்தேன்.
பறவைகளின் குரல்களைக்கேட்டேன்
புல்லின் அசைவிற்க்கேட்ப நடனமாடினேன்.
நான் காதலனின் பரிசு.
நான் திருமண மாலை.
நான் மகிழ்ச்சியின் நொடி.
நான் வாழ்வோர்
இறந்தவர்க்கு கொடுக்கும் பரிசு
நான் மகிழ்ச்சியின் பகுதி.
துக்கத்தின் பாகம்.
நான் தலை தூக்கிப் பார்ப்பது
ஒளியை மட்டுமே
நான் எப்பொழும் தலைகுனிந்து
என் நிழலைப் பார்ப்பது இல்லை.
இந்த ஞானத்தைத்தான்
மனிதன் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டும்.
கலீல் ஜிப்ரான் : ஞானக் களஞ்சியம்
திரும்ப திரும்ப சொல்லும்
பாசமுள்ள வார்த்தை நான்.
நீலவானக்கூடாரத்திளிருந்து
பச்சைக்கம்பள விரிப்பில்
விழுந்த மீன் நான்.
குளிர்காலம் கர்ப்பம் தரித்த
பஞ்சபூதங்களின் புதல்வி நான்
இளவேனிளுக்காக பெற்றுத்தந்த
குழந்தை நான்.
கோடை காலத்தின் மடியில் தவழ்ந்தேன்
இலையுதிர் காலத்தின் படுக்கையில் உறங்கினேன்
வைகரைப்பொழுதில்
ஒளியின் வருகையை அறிவிக்க
நான் தென்றலுடன் இணைந்தேன்.
மாலைப்பொழுதில்
பறவைகளுடன் சேர்ந்து கொண்டேன்
வெளிச்சத்திற்கு விடைகொடுத்தனுப்ப.
சமவேளிகளெல்லாம் எனது
அழகிய வண்ணங்களால் அணி செய்யப்பட்டன.
காற்றுக்கு நான் மணமூட்டினேன்.
நான் உறக்கத்தை தழுவும் பொது
இரவின் கண்கள் எனக்கு காவலிருக்கும்.
நான் விழித்த பொது
கதிரவனைக்கண்டு வெறித்தேன்.
அப்போதைய நாளின் ஒரே கண் அவன்தான்.
நான் பனித்துளி மதுவைக்குடித்தேன்.
பறவைகளின் குரல்களைக்கேட்டேன்
புல்லின் அசைவிற்க்கேட்ப நடனமாடினேன்.
நான் காதலனின் பரிசு.
நான் திருமண மாலை.
நான் மகிழ்ச்சியின் நொடி.
நான் வாழ்வோர்
இறந்தவர்க்கு கொடுக்கும் பரிசு
நான் மகிழ்ச்சியின் பகுதி.
துக்கத்தின் பாகம்.
நான் தலை தூக்கிப் பார்ப்பது
ஒளியை மட்டுமே
நான் எப்பொழும் தலைகுனிந்து
என் நிழலைப் பார்ப்பது இல்லை.
இந்த ஞானத்தைத்தான்
மனிதன் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment