கோடி சித்தர் , புரவிபாளையம்: நானும் எனது நண்பர் பெரியையா இருவரும் கோடிசித்தரைப்பர்க்க 1984 ம் வருடம் 31 ம் தேதி அக்டோபர் மாதம் புரவிபாளையம் சென்றிருந்தோம் . எனக்கு அது முதல் முறை. அதே நாளில் திரு. இளையராஜா அவர்களும் அவருடைய உதவியாளர் திரு ராஜேந்திரன் என்பவரும் எங்களுக்கு முன்பே அங்கிருந்தனர். சித்தருடன் கொஞ்சநேரம் அனைவரும் இருந்தோம் . திரு இளையராஜா சித்தருடன் தனியாக இருக்க விரும்பினார். நாங்கள் மாடியிலிருந்து கீழே இறங்கிவந்து சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தோம். பிறகு மேலே சென்று அனைவரும் உத்தரவு பெற்று கோவை திரும்பலாம் என நினைத்து :
' தாத்தா நங்கள் உத்தரவு பெற்றுக்கொள்கிறோம் . மெட்ராஸ் செல்ல வேண்டும் ' இளையராஜா .
' டெல்லியிலே பெரியகூட்டம்'' தாத்தா.
'நான் டெல்லி செல்லவில்லை தத்தா . மெட்ராஸ் தான் செல்கிறேன் 'திரு இளையராஜா
' டெல்லியிலே பெரியகூட்டம்'' தாத்தா.
நான் டெல்லி செல்லவில்லை தத்தா . மெட்ராஸ் தான் செல்கிறேன் 'இரண்டாம் முறையாக திரு இளையராஜா
' டெல்லியிலே பெரியகூட்டம்'' தாத்தா.
மிக அருகில் சென்று ' நான் டெல்லி செல்லவில்லை தாத்தா . மெட்ராஸ் தான் செல்கிறேன் 'மூன்றாம் முறையாக திரு இளையராஜா
' டெல்லியிலே பெரியகூட்டம்'' தாத்தா.
ஒன்றும் புரியாமல் நால்வரும் கீழே இறங்கி வந்து இளையராஜாவின் கண்டசா காரில் கோவை குரு ஓட்டல் வந்ததடைந்தோம்.சுமார் மாலை இரண்டு மணி.
செய்தி: இந்திரா காந்தி , பாரதப்பிரதமர் கொல்லப்பட்டு விட்டார் . ரயில்கள் அனைத்தும் ரத்து. கோவையை விட்டு ஐந்து நாட்களுக்குப்பிறகே திரு இளைராஜா அவர்கள் புறப்படமுடிந்தது.
கோடி சித்தர் சொன்னது அப்போதுதான் புரிந்தது.
No comments:
Post a Comment