18 சித்தர்கள் தங்களுடைய ஞானத்தை பாடல்களாக வெளிப்படுத்திய மாதிரி தற்கால சித்தர்கள் ஞானப்பாடல்களாக தெரிவிக்கவில்லையே என சிந்திதிருந்தபோதுதான் ராகவன் எனும் பெயருடன் தோன்றி காரை சித்தர் எனபின்னாளில் அழைக்கப்பட்ட சித்தர்ருடைய கனகவைப்பு என்ற நூலின் பதிப்பு கிடைத்தது. 1960 ஆம் வருடம் திரு பாலபாரதி SDS யோகியர் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட நூல். 390 பாடல்களைக்கொண்டது. 1918 ஆம் வருடம் பிறந்த இவர் கும்பகோன த்தையடுத்த குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ள நாகரசம்பேட்டையில் திரு கிருஷ்னமாச்சாரியார் ருக்மணி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். பிறகு காரைக்கோட்டையில் வளர்ந்தார். சுலோச்சனா எனும் மங்கையை மணந்து ரேணுகாதேவி எனும் மகளையும் மற்றும் ரவிகுமரன் எனும் மகனையும் பெற்றார். அவரின் பாடல்களை நீங்களும் அனுபவியுங்களேன்...
காப்பு
001
001
ஒம் எனும் ஐங்கரத்து முதலான் பாதம்
உயர்பரனுக் கும்குருவாம் குமரன் பதம்
ஊமென்ன முன்னிற்கு முமையாள் பாதம்
ஊமை எழுத்துள்ளுயிராம் சிவனார் பாதம்
காமனையே பெற்றெடுத்த திருமால் பாதம்
கனகமணிச் சிரகொவிற் கவினைத் கண்டே
சேமமுரும் சித்தர் பாதம் போற்றி காரைச்
சித்தன்யான் வைப்புமுறை செப்புவேனே.
002
ஊனெடுத்த பிணி பலவு மொடுங்கியோடும்
உத்தமனே எண்சித்தி யாவுங் கூடும்
மொநெடுத்த முப்பூவின் முறையுண்டாகும்
முன்வினையின் தொல்லை எல்லாம் முழுதும் போகும்
தானெடுத்த யோகநெறி தழைத் தூடாடும்
தன்னைத்தான் அறிந்திழையும் சமாதிகூடும்
காண்போர்க்கு வெட்டவெளி யிந்தநூலே.
003
சித்திதருகிற வள்ளி சிவகாமித்தாய்
சேகரத்தே மீசுறந்து சிறந்து நிற்பாள்
புத்தியினால் கால்வைத்தால் போதத் துற்றாள்
போக்குவரவில்லாத பூரணத்தாள்
பத்தினியாள் பழங்கிழவி என்என்றைக்கும்
பத்துவயதாக நிற்பாள் பரத்தி வேசி
சித்தர்கள் தாய் சித்தமணிப் பீடத்துள்லாள்
தேவியவள் வாலைப்பெண் காப்பே காப்பு.
Refer: for further 27 songs
Refer: for further 27 songs
No comments:
Post a Comment