பெரியோரே , நாம் வெளியே
காட்சி தரும் விரோதிகளை
அடித்து வீழ்த்திவிட்டோம் -
ஆனால் அதைவிட உயர்தர
விரோதி அகத்திலே அமர்ந்து
இருப்பதைக் கவனிக்கவில்லை
இந்த விரோதிகளை
வீழ்த்துவது நம் அறிவைப்
பொறுத்த விஷயமல்ல -
அகத்திலுள்ள புலி
முயல்களிடம் ஏமாறுவதில்லை
மனமெனும் கழுதையை
சுதந்திரமாக விட்டுவிடாதே
அந்தக்கழுதைக்கு விருப்பமானது
உலக புல்வெளி .
அதை மறந்தும் சிறிது நேரத்திற்கு
சுதந்திரமாக அலையவிட்டால்
புல்வெளியை நாடி அது
பல கல் தூரம் ஓடிவிடும்
உனக்கு நேர்வழி
தெரியவில்லையா ?
அந்தக்கழுதை சொல்வதற்கு
மிகவும் முரண்பட்டு நட
அதுவே நேர்வழியாகும்.
சத்தியத்தை செவிமடுத்தல்
எல்லோருக்கும் சாத்தியப்படாது
அத்திப்பழம்
எல்லாப் பறவைகளுக்கும்
உணவல்ல .
Source: Malarvanam: Moulana Rumi
No comments:
Post a Comment