வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?
ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது.
சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச்செல்கிறது.
வேண்டும் என்கிற உள்ளம் விரிவடைந்துகொண்டே போகிறது.
போதும் என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.
ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்தது , ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால்
வழி நெடுக நாணயம் கிடைக்கும் என தேடிக்கொண்டே போகிறான்.
ஒரு விஷயம் கைக்கு கிடைத்துவிட்டால், நூறு விஷ்ச்யன்களை மனது வளர்த்துக்கொள்கிறது.
ஆசை எந்தக்கட்டத்தில் நின்று விடுகிறதோ அந்தக்கட்டத்தில் சுய தரிசனம் ஆரம்பமாகிறது.
சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்குத் தெரிகிறது.
ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?
லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் மனப்பக்குவம் வருகிறது.
என் ஆசை எப்படி வளர்ந்ததென்று எனக்கே நன்றகத்தேரிகிறது.
சிறு வயதில் , வேலையின்றி அலைந்த போது, மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா என்று ஏங்கினேன். கொஞ்ச நாளில் கிடைத்தது. ஆறு மாதம் தான் அந்த நிம்மதி.
மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா என்று மனம் ஏங்கிற்று. அதுவும் கிடைத்தது. பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று. அதுவும் கிடைத்தது. மனது ஐநூருகுத்தாவிற்று. அது ஆயிரமாக வளர்ந்தது. ஈரயிரமாகப்பெருகிற்று. யாவும் கிடைத்தன.
இப்போது நோட்டடிக்கும் உரிமையியே மனது கேட்கும் போலிருக்கிறது. எந்தக்கட்டத்திலும் மனம் பூர்த்தியாகவில்லை. இவ்வளவு போதும் என்று எண்ணுகிற நெஞ்சு, அவ்வளவு கிடைத்ததும் அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே ஏன்?
அதுதான் இறைவன் லீலை. ஆசைகள் அற்ற இடத்தில் குற்றங்கள் அற்றுப்போயவிடுகின்றன. குற்றங்களும் பாவங்களும் அற்றுப்போயவிட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமல் போய்விடும்.
அனுபவங்கள் இல்லாவிட்டால் நன்மை தீமைகளைக்கண்டு பிடிக்க முடியாது. ஆகவே தவறுகள் மூலமாகவே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத்தூண்டி விடுகிறான்.
ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை. அப்படி ஒழித்துவிட்டால் வாழ்கையில் என்ன சுகம்?
அதனால் தான் தாமரை இலைத்தண்ணீர் போல் என்று போதித்தன மதங்கள். நேரிய வழியில் ஆசைகள் வரலாம். வளலராம். ஆனால் அதில் லாபமும் குறைவு . பாவமும் குறைவு.
ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்த்து, உனக்கு ஐநூறு கிடைத்தால் அந்த ஐநூறு உனக்கு பணமாகத்தெரியாது. இருநூறு எதிர்பார்த்து, உனக்கு ஐநூறு கிடைத்தால், நிம்மதி வந்துவிடுகிறது.
எதிர்பார்ப்பதை குறைத்துக்கொள். வருவது மனதை நிறைய வைக்கிறது. என்பதே மதங்களின் தத்துவம்.
கவிஞர் கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்து மதம்