......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Wednesday, November 16, 2011

Course of life 4

              கால இடங்களால் உமது உடல்கள் வரையரைக்குட்பட்டிருந்தாலும் , அவை காலத்திலும்  வெளியிலுமுள்ள எல்லப்போருட்களாலும் ஈர்க்கப்படுகின்றன. உமது எத்தனையோ அம்சங்கள் கதிரவனில் இருந்து வருபவை. கதிரவனால் வாழ்பவை. அதே போலத்தான் வானப்பெருவெளியின்  உலகங்களும் தடமில்லாப்பாதைகளும்.

             எல்லாப்பொருட்களும் மனிதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதே போல் மனிதனும் அனைத்துடனுமினைகப்பட்டுல்லான். பிரபஞ்சம் முழுதும்  ஒரே உடல்தான்.  ஒவ்வொரு துகளும்  ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. அதனால் நீங்களும் எல்லாவற்றுடனும் தொடர்பு கொண்டவர். வாழும்  போதே தொடர்ந்து செத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதே போல் சாகும் போது தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த  உடலில் அல்லாமல்  போனாலும் , வேறொரு உடல் வடிவில்  இருந்து கொண்டே இருப்பீர்கள். அப்படி ஒரு உடல் கடவுளிடம்  சங்கமமாகும் வரை வாழ்வு தொடரும். அதாவது, உமது மாற்றங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும் வரை.

ஒரு மாற்றத்திலிருந்து இன்னொரு மாற்றத்திற்க்கான பயணத்தின் போது நாம் இந்தப் பூமிக்கு திரும்புவோமா?

           காலத்தின்  சட்டம், " திரும்பத் திரும்ப" என்பது தான். ஒரு காலத்தில் நடந்தது, மற்ற காலங்களில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தே தீரும். மனிதன் விசயத்தில் இடைவெளிகள் கூடலாம் , குறையலாம். அவனது திரும்பத்திரும்ப வருவதற்கான மன உறுதியும், ஆசையையும் பொறுத்து, அது அமையும்.

           வாழ்வு என்று அறியப்படுவதின்வட்ட சுழற்சியிலிருந்து , மரணம் என்று அறியப்படுவதான வட்டச்சுழற்சிக்குள் நீங்கள் பிரவேசிக்கும் போது, பூமியின் மீது வைத்திருக்கும் தீராத தாகத்தையும், தணியாத பசியையும் எடுத்துச் செல்கிறீர்கள். பூமியின் மேல் வைத்த ஆசையின் காரணமாக பூமி மீண்டும் உம்மைத்தன் மார்பை நோக்கி இழுத்துக்கொள்கிறது. பூமி உமக்கு பாலூட்டி வளர்க்கும் காலமே உங்களைப் பால் மறக்க விலக்கும். தொடரும் ஜனன மரணங்களில் இது வே தொடரும். ஒரு காலத்தில் உங்கள் சொந்த விருப்பப்படி , மன உறுதிப்படி, உங்களை நீங்கள் மறந்து போகும் வரை அது தொடரும்.

என்றென்றைக்கும் இந்தப்பூமியை  விட்டொழிக்க வேண்டுகிறேன். அதை நான் எப்படிச் செய்வது?

பூமித்தாயையும் அவளது மக்களையும் நேசிப்பதன் மூலமாக. பூமியின் தொடர்பால் மிஞ்சி நிற்கும் எல்லாமும், அன்பாக மட்டுமே அமையும் போது, பூமி தன்னுடைய கடனிலிருந்து உங்களை விடுவித்து    விடும்.


அன்பு ஒரு பற்று. பற்று ஒரு பந்தம் தானே?


இல்லை. அன்புதான் பந்தங்களில் இருந்து விடுவிப்பது. நீங்கள் எல்லாவற்றையும் சமமாக நேசிக்கும் போது எந்தப்பற்றும் உங்களைப் பற்றாது. 

மிர்தாதின் புத்தகம்- மிகையல் நைமி. 










No comments:

Post a Comment