......the spritual path shown by Buddha, Osho , Mikhail Naimy, Percival , Sufis and Siththars of this planet........

Monday, January 30, 2012

O my world

உலகே !
நீ எவ்வளவு கருணையுடன் விளங்குகின்றாய்?
பெற்றதை இழந்து 
மீண்டும் பெறமுடியாது தத்தளிக்கும் 
உன் மக்களுக்காக 
நீ சேமித்து வைத்திருக்கும் 
உனது பேராற்றல் எவ்வளவு விந்தையானது!

நாங்கள் கூக்குரலிடுகின்றோம்.
நீ புன்முறுவல் பூக்கிறாய். !

நாங்கள் திடுமென ஓடி மறைந்து அழிக்கிறோம்;
நீ நிலைத்து செழித்து நிற்கிறாய்!

நாங்கள் தீமைகளைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றோம். 
நீ பேசாமலிருந்து தூய்மை காட்டுகிறாய்.

நாங்கள் அறம் பிறழ்ந்திருக்கிறோம்
நீ அறத்தின் வடிவாக திகழ்கிறாய்.

கனவுகளின்றி நாங்கள் உறங்குகிறோம்.
நீ  உனது புனித விழிப்பில் கனவுகள் காண்கின்றாய்.

நாங்கள் நின் மார்பில் 
வேலாலும் வாளாலும் துளைக்கிறோம் 
நீயோ , மருந்திட்டு 
எங்கள் காயங்களுக்கு கட்டுப் போட்டு 
ஆற்றி நலம் செய்கிறாய்.

நின் வயல்களில் நாங்கள் 
மண்டையோடுகளையும் , எலும்புகளையும் 
விதைக்கிறோம்.
நீயோ அவற்றிலிருந்து 
புல்லையும் பசிய மரங்களையும் 
விளைவிக்கின்றாய். 

நாங்கள் எங்கள் கழிவுகளை 
நின் மார்பிலே கொண்டு வந்து கொட்டுகிறோம்.
நீயோ , எங்கள் களஞ்சியங்களை 
தானியங்களை நிறைத்துவிடுகிறாய்

திராட்சை பானம் செய்யும் இடங்களை, 
திராட்சை கனிகளால் நிறைத்துவிடுகிறாய். 

நாங்கள் வெடிகுண்டு செய்ய 
உனது மூலப்பொருளை தோண்டி எடுக்கிறோம் 
நீயோ எங்கள் மூலப்போருல்களில் இருந்து
எழில்குலுங்கும் அள்ளி மலர்களையும் 
ரோஜா மலர்களையும் தொற்றுவிக்கின்றாய்.

உலகே 
நீ கதிரவன் பழுக்க வைத்த கனியோ?
வானப்பெரு நிலத்தில் வேர் ஊன்றி 
எல்லையற்ற பரவெளியில் கிளை பரப்பி 
நின்று கொண்டிருக்கும் 
பூரண ஞான மரத்தின் அழகுக் கனியோ !


வானத்தேவன் உள்ளங்கையில் 
காலதேவன் வைத்த கருமணியோ நீ?
உலகே நீ யார்?
நீ எதனால் ஆக்கப்பெற்றிருக்கிறாய்?

உலகே நீ தான் நான்.
நீயே என் கண். நீயே என் பார்வை.
நீயே என் அறிவு. நீயே என் கனவு.
நீயே என் பசியும், தாகமும்.
நீயே என் கவலையும் மகிழ்ச்சியும்
நீயே என் மறதியும் நினைவும்
என் கண்களில்  வாழும் அழகு நீ!
என் இதயத்தில் பொங்கியெழும் ஆவல் நீ.
என் உயிரின் அழியா வாழ்வு நீ!

உலகே நீயே நான்.

மூலம்: ஞானக்களஞ்சியம் கலீல் கிப்ரான்  


























Search with in

பலநூறு ஆண்டுகளாகப் பலப்பலப்பிறவிகளாக அவனை நீ வெளியே தேடிக்கொண்டிருக்கிறாய். உன்னுடைய அகத்தில் தேடுகிற காலம் வந்துவிட்டது. உனக்குள்ளேயே அவனைத்தேடு. உனக்கு வெளியே நீ காணாததை, நிச்சயமாக நீ உனக்குள்ளேயே காண்பாய். அவனுக்குள்ளேயே ஒருவன் தேடியிருப்பனாகில், பிரபஞ்சபெரறிவின்முழு வரலற்றிலுமே புத்தனைக் கண்டு கொள்வதில் யாருமே தோற்றதில்லையே! விதி விலக்கு ஏதுமின்றி, உள்ளே பார்த்த ஒவ்வொருவனும், புத்தனை கண்டிருக்கின்றனர். நீயும் ஒரு விதி விலக்கில்லையே? நீயும் நிச்சயமாக விதிவிலக்காக இருக்கமுடியாது. ஏனெனில் உயிர்ச்சக்தி அதனுடைய மாசற்ற தன்மையில், புத்தனாகவே இருக்கிறது.

மூலம்: ஓஷோ 

Observer and the Observed

Please explain . Is life an observer and death observed?
No, both are observed- life and death. Beyond both is the observer. You cannot call that observer 'life' because life contains death in it. You cannot call that observer 'death' because the death presupposes life. That observer is just transcendence.

         That which you are is neither life nor death. You pass through life, you pass through death but you are neither. You are just a witness to it all. You pass through happiness, you pass through misery, you pass through disease, you pass through health, you pass through success,you pass through failure - but you are none of these. You remain the watcher and you remain the witness.
    
         That witnessing is beyond all dualities. So don't try to make it identified with one part of the polarity. Life is one part of the same circle in which the other half , death exists. Death and life are not apart, they are together. death and life are two aspect of the same energy, two faces of the same coin- on one side life and the other side death. Can you think of life without death? Or can you think of death without life? So they are not really opposites but complementariness. They are friends and not enemies; They are business partners.

         I can understand your question. You would like to get identified with life, so that you can say ,'I am immortal.No death for me.' That is your hankering. And I am not saying that you are not immortal, but the word 'immortal' is not right. You are eternal, not immortal. Immortal means you have no death- always life.  'Eternity'  means you don't have either.  You are part of this totality that goes on and on- through lives and through deaths, ups and downs, valleyes and peaks- and goes on moving. You are that which dies, that which lives and yet remains aloof... a lotus in the pond, untouched.

Source: Zen, the path of paradox, Osho

        

Tuesday, January 3, 2012

Sippi

பாரசீகக் கவி ஞானி ஜலாலுதீன்   ரூமி பாடுகிறார்:

கடலின் அடியாழத்தில் இருக்கும் முத்து,
தன் சிப்பிக்குள் இருந்தபடியே
சமுத்திரமா? அது எங்கே இருக்கிறது ? என்று கேட்கிறது.
அந்த முத்தைப்போன்றவன் தான் மனிதன்.

பாலூற்று உனக்குள் இருக்கிறது.
நீ ஏன் செம்பை எடுத்துக்கொண்டு
பாலுக்கு அலைகிறாய்?

உன் தலையில் உணவுக்கூடை இருக்கிறது.
நீ  ஏன் எச்சில் சோற்றுக்காக
வீடு வீடாய் பிச்சை எடுக்கிறாய்?

உள் கதவைத் தட்டு.
வேறு கதவுகளைத் தட்டாதே.

நீ நீருக்குள் இருக்கிறாய்.
ஆனால்  அடுத்தவனிடம்
நீர்கேட்டு அலைகிறாய்.

உன்னைச்சுற்றி இருக்கும் நீரை
நீ பார்க்க முடிவதில்லை.
நீரை உன் பார்வைக்கு மறைக்கும்
தடைகளைத்தான் உன்னால்
பார்க்க முடிகிறது.

படைப்புகளைப் பற்றி அறிய கேள்விகள் உதவும்.படைத்தவனைப்பற்றி அறிய உதவாது.
அறியாதவனே கேள்வி கேட்பான். அறிந்தவன் கேட்க மாட்டன்.
எல்லக்கேள்விகளுக்கும் விடையாக இருப்பவன் இறைவன்.
விடை இருக்கும் பொது கேள்விகள் எதற்கு?

மூலம்: அப்துல் ரகுமான் :இது சிறகுகளின் நேரம்